முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஸ்கோடி கடல் பகுதியில் மர்ம படகு: போலீஸார் தீவிர விசாரணை.

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- ராமேசுவரம் தனுஸ்கோடி கடல் பகுதியில் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மர்ம படகை போலீஸார் நேற்று கைப்பற்றி,படகில் வந்த கடத்தல்காரர்கள் குறித்து  மண்டபம் கடலோரப்பாதுகாப்பு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 ராமேசுவரம் தனுஸ்கோடி கடல் பகுதியான முகுந்திரராயர்சத்திரம் கடல் பகுதியில் நடுக்கடலில் பிளாஸ்டிக் படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மண்டபம் கடலோரப்பாதுகாப்பு போலீஸார்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அதன் பேரில் போலீஸார்கள் பைபர் படகில் அப்பகுதிக்கு சென்று நிறுத்தப்பட்டிருந்த படகை கைப்பற்றினர்.பின்னர் படகை சோதனையிட்டதில் எந்தவிதமான பொருள்களும் கிடைக்கவில்லை.

இப்படகு இலங்கை பகுதியை சேர்ந்தவை என தெரிய வந்தது.அதன் பின்னர் போலீஸார் மர்ம படகை முகுந்திரராயர்சத்திரம் கடல் பகுதியிலுள்ள மீன்கள் இறக்கும் தளத்திற்கு இழுத்து வந்து பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.இது குறித்து அபப்குதி்ககு வந்த மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸார்கள் படகு நடுக்கடலில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தது. குறித்து ஆலோசணை செய்தனர்.இதில் இலங்கையிலிருந்து கடத்தல்காரர்கள் பல கோடி மதிப்புள்ள கடத்தல் பொருள்கள் கொண்டு வந்திருக்க வாய்ப்புள்ளதாகவும,ஆதலால் சந்தேகம் இல்லாத அளவிற்கு படகை நடுக்கடலில் கடத்தல்காரர்கள் நிறுத்திவிட்டு உள்ளூர் கடத்தல்காரர்களின் உதவியோடு ராமேசுவரம் வழியாக வெளியூர்களுக்கு சென்றிருக்கலாம் என உறுதி செய்தனர்.ஆதலால் மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸார்கள் இது குறித்து ராமேசுவரம் தீவு பகுதியிலுள்ள முன்னாள் கடத்தல்காரர்களிடம் விசாரணா நடத்தி வருகின்றனர்.மேலும் இப்படகு குறித்து மண்டபம் கடலோரப்பாதுகாப்பு போலீஸார் வழக்கு பதிந்து ஒரு பகுதியாக தப்பியோடிய கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago