Idhayam Matrimony

வேளாண்மைத்துறை மற்றும் அதனைச் சார்ந்துள்ள துறைகளின் செயல்பாடுகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், வேளாண்மைத் துறை மற்றும் அதனைச் சார்ந்துள்ள துறைகளின்  அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   தலைமையில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு குறித்த விபரங்கள், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகளின் நிலை, நீர் பற்றாக்குறை சமாளிக்க நீர் சேமிக்கும் உபகரணங்களான சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் குறித்த வட்டார வாரியான இலக்கு சாதனை விபரங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைந்து சாதனை அடைய மாவட்ட கலெக்டர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் அம்மா பண்ணை மகளிர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பயிற்சிகள், திட்டங்கள் குறித்து வட்டார வாரியான இலக்கு சாதனை விபரங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைந்து சாதனை அடைய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்  அறிவுறித்தினார்கள்.

 

                        இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரெங்கநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.வி.எஸ் குமார், கால்நடைப் பாராமரிப்புத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, விதைச்சான்றுத்துறை, வேளாண்விற்பனைத்துறை தோட்டக்கலைத்துறையினர் உள்ளிட்ட தொடர்புடைய  அலுலவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்