புதிய முதல்வருக்கு கவர்னர் கெடு எதிரொலி: தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      தமிழகம்
TN assembly(N)

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிக்கும் பொருட்டு நாளை தமிழக சட்டசபை கூடுகிறது. அன்று பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை கோரும் தீர்மானம் எடுத்துக்கெள்ளப்படுகிறது.

கவர்னர் அழைப்பு

அ.தி.மு.கவின் சட்டசபை கட்சித்தலைவராக சசிகலா கடந்த 5-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 10-ம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து சசிகலா ஆட்சியமைக்கும் உரிமை கோரினார். இதற்கிடையில் முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்து, கட்டாயப்படுத்தி, தன்னிடம் ராஜினாமா கடிதம் பெற்றதாக தெரிவித்தார். இந்த நிலையில் அ.தி.மு.கவில் இருந்த 12 எம்.பிக்கள், 10 எம்.எல்.ஏக்கள் முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்தனர். இந்த நடவடிக்கையை தொடர்ந்து அ.தி.மு.க எம்எல்.ஏக்கள் அனைவரும் சென்னை அடுத்த கூவத்தூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பதவியேற்கும்படியும், 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நீருபிக்கும்படியும் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டார்.


புதிய அமைச்சரவை பதவியேற்பு

இதற்கிடையில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். அடுத்தடுத்து 30 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அமைச்சரவையின் பெரும்பான்மையை நீருபிக்க வரும் நாளை (18-ம் தேதி) சட்டசபை கூட்டப்படும் என்று அறிவிக்கப்ப்டடுள்ளது.

நம்பிக்கை தீர்மானம்

இது குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 26 (1) கீழ் பேரவைத்தலைவர் , தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை 2017-ம் ஆண்டு 18-ம் தேதி காலை 11 தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார்கள். அப்போது அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சட்டசபையில் நடைபெறும் வாக்கெடுப்பில் திமுக அ.தி.மு.க அணிகள் யாரையும் ஆதரிக்காது என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: