முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் பொது ஏலம் மூலம் அகற்ற நடவடிக்கை-

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பொது ஏலம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முனைவர் நடராஜன் எச்சரித்துள்ளார்.

குறைதீர்க்கும் கூட்டம்

     ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர்;.ச.நடராஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் எதிர்பார்த்த அளவில் வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் விவசாயிகள் மூலம் பயிரிடப்பட்ட நெல், சிறுதானியம் உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் முழுவதுமாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு ஏதுவாக வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஒவ்வொரு வருவாய் கிராமம் வாரியாக பயிர்மதிப்பீட்டு அளவு அறுவடை பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. விரைவில் பயிர் அறுவடை பரிசோதனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு பரிசோதனை முடிவுகள் அனைத்தும் அறிக்;கையாக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.

தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட சாத்தியக்கூறு உள்ள இடங்களை துல்லியமாக கண்டறிந்து அவ்விடங்களுக்கு உகந்த மாற்றுத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட ஏதுவாக வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மூலம் தெரிவு செய்யப்பட்டு ரூ.13.17 கோடி மதிப்பில் 1,061 பணிகள் மேற்கொள்ள அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் முதற்கட்டமாக 610 பணிகள் மேற்கொள்ள ரூ.7.22 கோடி மதிப்பில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. பணி ஆணை வழங்கப்பட்டுள்ள குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணிகளை உடனடியாக நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் கீழ் உள்ள கண்மாய்கள்-குளங்கள்-ஏரிகள் ஆகியவற்றில் விவசாயம் மற்றும் இதர பணிகளுக்கு தேவையான கிராவல், சவுடு மற்றும் மண் ஆகியவற்றை தூர்வாறும் நோக்கில் அரசு நிர்ணயித்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் 60 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு மாவட்ட அரசு இதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

  நீர்நிலைகள் தூர்வாருதல்

     இதுதவிர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், ஊரணிகள் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு உரிய கால அவகாசம் வழங்கியும், இதுநாள் வரையில் அகற்றாமல் உள்ள உரிமைதாரர்களுக்கு குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் 133-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும். தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து வேருடன் அகற்றி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் இல்லாத நிலையினை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு பேசினார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் 3 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.28 ஆயிரம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.  தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு குறைந்த அளவிலான நீரைப் பயன்படுத்தி அதிக அளவிலான மகசூல் ஏற்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சொட்டு நீர்;ப்பாசனம் மற்றும் நுண்ணீர் பாசனம் ஆகிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் பயன்பெற சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருவதாகவும், தகுதியான விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.அலி அக்பர், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடைபராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.தி.மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ்.வெள்ளைச்சாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்  எஸ்.தமிழ் வேந்தன் உட்பட  அரசு அலுவலர்கள், விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகள்,  விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago