தமிழகம் வளர்ச்சி பெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      தமிழகம்
Palanisamy takes oath(N)

சென்னை  - மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கனவு கண்டவாறு தமிழகம் வளர்ச்சி பெற பிரதமர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள  எடப்பாடி கே. பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.  தமிழக முதலமைச்சராக  எடப்பாடி கே.பழனிச்சாமி  பதவியேற்றுக்கொண்டார். இதனையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி முதலமைச்சரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிரதமரின் வாழ்த்துக்கு முதலமைச்சர்  எடப்பாடி கே.பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர்  நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், மறைந்த  முதலமைச்சர்  ஜெயலலிதா கனவுகண்டவாறு தமிழகம் வளர்ச்சிபெற பிரதமர் ஒத்துழைப்பும், ஆதரவும் அளிப்பார் என எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: