முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு அனுபவம் இல்லை என்று கூறுவதா ? மோடிக்கு அகிலேஷ் யாதவ் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

மெயின்புரி  - தனக்கு முன் அனுபவம் இல்லை என்று கூறிய பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

அகிலேஷுக்கு அனுபவம் இல்லை:
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனல் பறக்கிறது. பிரச்சாரத் தின் போது பேசிய பிரதமர் மோடி, “அகிலேஷுக்கு அனுபவம் இல்லை. காங்கிர ஸாரின் தந்திரத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை. மேலும் 1984-ல் தந்தை முலாயம் சிங் யாதவை கொலை செய்ய முயன்றவர்களுடன் (காங்கிரஸ்) அகிலேஷ் யாதவ் எப்படி கூட்டணி வைத்தார்” என கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் மெயின்புரியில்  நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, மோடியின் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் அகிலேஷ் பேசிய தாவது:

பிரதமர் மோடியின் ஆலோசகர்கள் இதைவிட சிறப்பான, சமீபத்திய பல்வேறு உதாரணங்களை அவருக்கு கூறியிருக்கலாம். அதாவது, என் மீதும், காங்கிரஸ் மீதும் மக்கள் மத்தியில் கோபத்தை உரு வாக்குவதற்காக 1984 சம்பவத்தை மோடி சுட்டிக்காட்டி உள்ளார்.

எங்களுடன் போட்டி போட முடியாது
அதைவிடுத்து, பிரோசாபாத்தில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் மாநில தலைவர் ராஜ் பப்பர் எங்களைத் தோற்கடித்ததை குறிப்பிட்டிருக்கலாமே. தோல்வி பயம் காரணமாகவே அவர் இதுபோன்ற பழைய சம்பவங்களைச் சுட்டிக் காட்டுகிறார். மேலும் எனக்கு அனுபவம் இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், சைக்கிளில் (சமாஜ்வாடியின் சின்னம்) செல் பவர்கள் ஒருமுறை கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்து ஓட முடியும். எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியும். அதுவும் வேகமாக ஓட்ட தெரியும். அதேநேரம், யானை (மாயாவதி கட்சி சின்னம்), தாமரை(பாஜக சின்னம்) ஆகியவற்றால் சைக்கிளுடன் போட்டி போட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்