முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா, தினகரன் நியமனங்கள் செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் அணி புகார்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி  - அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் பதவியில் அமர்த்தப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் 11 பேர்  புகார் அளித்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த 5-ம் தேதி அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில் சசிகலா சிறை தண்டனை பெற்றதால் அவரது அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது.

பன்னீர்செல்வத்தை 12 எம்.பி.க்கள் மற்றும் 9 எம்எல்ஏக் கள் ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி. டாக்டர் வி.மைத்ரேயன் தலைமையில்  டெல்லி வந்த எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் அளிக்கப்பட்ட புகாரில், “கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதும், துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டதும் செல்லாது. அதிமுகவில் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவி என்பது இல்லை. சசிகலாவுக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருப்பதும் கட்சிக்கு விரோதமானது” என்று கூறி யுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்