முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 முறை தலாக் தொடர்பான வழக்கு : மார்ச் 30 ம் தேதி சுப்ரீம்கோர்ட்டு முடிவு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - முஸ்லிம்களின் விவாகரத்து முறை தொடர்பான வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது குறித்து மார்ச் 30-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு  தெரிவித்துள்ளது.

3 முறை ‘தலாக்’ :

இஸ்லாமிய முறைப்படி ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய விரும்பினால் 3 முறை ‘தலாக்’ என்று கூறி பிரியும் முறை நடைமுறையில் உள்ளது. இதை ‘முத்தலாக்’ என்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், “முத்தலாக் முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது, முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதிக்க கூடியது, கொடூரமானது” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு:
இந்த தீர்ப்பை எதிர்த்து  சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் முறைக்கு மத்திய அரசும், பெண்கள் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) ஆதரிக்கிறது. இந்நிலையில், முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்டது தொடர்பாக  சுப்ரீம்கோர்ட்டில் மேலும் சில வழக்குகள் தொடுக்கப்பட்டன.

பதில் மனுவை தாக்கல் செய்லாம் :
இந்த வழக்குகளை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு  நேற்று முன்தினம்  விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கேஹர் கூறியபோது, “இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது குறித்து மார்ச் 30-ம் தேதி முடிவு செய்யப்படும். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பதில் மனுவை அடுத்த விசாரணையின் போது எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும். அந்த பதில் 15 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். ந்த அமர்வில் உள்ள மற்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.வி.சந்திரசூட் ஆகியோர் கூறியபோது, ‘‘இந்தப் பிரச்சினை மிகவும் முக்கியமானது. எனவே, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசாரணை நடத்த தயார்’’ என்றும் குறிப்பிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்