முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி குறித்து தனியார் பள்ளி தலைமையாசிரியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம்.

 

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சுகாதாரத்துறை சார்பாக மாவட்ட அளவிலான தனியார் பள்ளி தலைமையாசிரியர்களுடன் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:தட்டம்மை ரூபெல்லா நோயினை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதியில் இருந்து 28-ஆம் தேதி வரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஒன்பது மாதம் முடிவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போட்டிருந்தாலும் கூடுதலாக ஒரு தவணை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படும்.தட்டம்மை என்பது குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் உடலில் தடிப்புடன் வரும் அம்மை வகைகளில் ஒன்று. இந்த அம்மை மற்ற அம்மைகள் போலில்லாமல் நிமோனியா எனப்படும் தீவிர நெஞ்சு சளி, ஜுரம், தீவர வயிற்றுப்போக்கு, கடும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.தட்டம்மை ரூபெல்லா நோயினை முற்றிலும் ஒழிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை (பிப்ரவரி 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை) 876 அரசு பள்ளிகளிலும், 167 தனியார் பள்ளிகளிலும், சுமார் 1,72,789 குழந்தைகளுக்கு இந்த ஆசு தடுப்பூசி போடப்பட்டு, அனைத்து குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்.ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் ஆஆசு தடுப்பூசியை போட்டிருந்தாலும் இந்த ஆசு தடுப்பூசியை போடலாம் என இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர் டாக்டர்.இளையராஜா கூறினார். எனவே அனைத்து தனியார் பள்ளிகளும், பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி, இந்த தடுப்பூசியின் பயன்களை அனைத்து பெற்றோர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். இந்த மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி முகாம் வெற்றி பெறுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், விழுப்புரம் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சவுண்டம்மாள், கள்ளக்குறிச்சி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ஜெமினி மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago