முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக உரிமைகளை கர்நாடக அரசு நசுக்கப் பார்க்கிறது:ஸ்டாலின் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

சென்னை  - தமிழக உரிமைகளை கர்நாடக அரசு நசுக்கப் பார்ப்பது கண்டனத்திற்குரியது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.  இது தொடர்பாக ஸ்டாலின்  நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது , ''காவிரி நதியின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட இடங்களில் இரு அணைகள் கட்டும் திட்டத்திற்கு கர்நாட அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இறுதி தீர்ப்பின் படி கொடுக்க வேண்டிய காவிரி நதி நீரை கொடுக்காமலும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் மறுத்து வரும் கர்நாடக அரசு, ஒவ்வொரு முறையும் நடுவர் மன்றத்தால் வெளியிடப்பட்ட இறுதி தீர்ப்பிற்கு எதிராகவும், விரோதமாகவும் செயல்பட்டு வருவது கூட்டாட்சி தத்துவத்தை மதிக்காத அம்மாநில அரசின் போக்கை காட்டுகிறது. முதலில் சிவசமுத்திரம் ஆற்றுப் போக்கு நீர் மின் திட்டம் மற்றும் மேகதாது மின் திட்டம் என்றும், பிறகு மேகதாது குடிநீர் திட்டம் என்றும் ஒவ்வொரு பெயர் சூட்டி கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்தின் காவிரி உரிமையை வஞ்சிக்க முற்பட்டு வருவது கவலையளிக்கிறது.

தமிழகம்  கடுமையாக எதிர்க்கிறது :
மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை மேற்கொள்ளும் போதெல்லாம் தமிழகம் அதை கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. குறிப்பாக தமிழக சட்டப்பேரவையில் கட்சி வித்தியாசம் பாராமல் 07-10-2013, 05-12-2014, 27-03-2015 ஆகிய காலகட்டங்களில் மேகதாதுவில் எந்த வடிவிலும் புதிய மின் திட்டமோ, குடிநீர் திட்டமோ உருவாக்கக் கூடாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனாலும், அண்டை மாநில சட்டப்பேரவையின் உணர்வுகளைக் கூட கர்நாடக அரசு மதிக்க மறுப்பது தமிழக மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகள் :
காவிரி இறுதி தீர்ப்பின் மீதான அனைத்து வழக்குகளையும் மார்ச் 21-ம் தேதியிலிருந்து தினமும் விசாரிப்போம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ள நிலையில், கர்நாடக மாநில அமைச்சரவை மேகதாதுவின் குறுக்கே அணை கட்டும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிக்கிறது.

மேகதாதுவின் குறுக்கே அணை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, காவிரி இறுதி தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விடுவது, மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்டுவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலுமே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு விரோதமாக நடவடிக்கைகள் எடுப்பதை தன் பிரத்யேக அணுகுமுறையாக கர்நாடக அரசு கடைப்பிடித்து வருவது அண்டை மாநிலங்களுடன் இருக்கும் நல்லுறவில் சச்சரவுகளை உருவாக்கும் போக்கு என்றே திமுக கருதுகிறது. அதிலும் குறிப்பாக, காவிரி இடைக்காலத் தீர்ப்பு வெளிவந்த போது கர்நாடக அரசு காட்டிய அதே அரசியல் சட்ட விரோத நடைமுறையை, தொடர்ந்து பின்பற்றி தமிழக உரிமைகளை நசுக்க பார்ப்பது கண்டனத்திற்குரியது. ஆகவே மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, உடனடியாக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும். இது தொடர்பான வழக்குகள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், கர்நாடகாவின் சட்ட விரோத அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த மாநில அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மத்திய அரசின் கவனத்திற்கு புதிதாக அமைந்துள்ள அதிமுக அரசு உடனடியாக எடுத்துச் சென்று, கர்நாடகாவின் தன்னிச்சையான இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago