முதல்வர் பதவியில் பழனிசாமி நீடிப்பது கேள்விக்குறியே: பொன்.ராதாகிருஷ்ணன்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      அரசியல்
pon radhakrishnan 2017 1 15

சென்னை   - தமிழக முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி இன்று இருப்பாரா என்பது கேள்விக்குறிதான் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  ''கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வந்த திராவிடக் கட்சிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி நாளை  (இன்று) வரை பதவியில் இருப்பாரா என்பது கேள்விக்குறியே. அதற்கு வேறு யாரும் காரணமில்லை, அவரது கட்சிக்காரர்கள்தான் காரணம். பழனிசாமி என்னுடைய சகோதரர் போன்றவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் குடும்ப ஆட்சி கூடாது. கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழலில் திமுகவை தவிர்த்து வேறுயாரும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழகத்தில் புதிய தேடல் உருவாகி உள்ளது'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: