முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் 3-வது கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: நாளை வாக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ  - உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3-வது கட்டதேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுமாலையுடன் முடிந்தது. நாளை 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலம் பெரியது. இந்த மாநிலத்தில் 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு 2 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டது.

3-வது கட்ட தேர்தல்:
இந்தநிலையில் 3-வது கட்ட தேர்தலுக்கான 69 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது. நாளை இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பரூகாபாத், ஹர்டோல், கண்ணோஜ், மனிபூரி, எடவா, அவுரியா, கான்பூர் தெஹத், கான்பூர், உன்னாவ், லக்னோ, பாரபங்கி, சீதாபூர் ஆகிய 12 மாவட்டங்களை உள்ளடக்கிய 69 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 2 கட்ட தேர்தல் நடந்த பகுதிகளில் ஜாட் இனத்தவர்கள் அதிகமாக உள்ளனர். இந்த 3-வது கட்ட தேர்தலில் மைனாரிட்டி இனத்தை சேர்ந்த மக்கள் அதிக அளவில் உள்ளனர். அதனால் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி:
பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி, கட்சி தலைவர் அமீத் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மாநில தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். ஆளும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களையும் பகுஜன்சமாஜ் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து முறையே முதல்வர் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் தீவிர பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தாக்கு:
பிரசாரத்தின்போது ஒருவருக்கொருவர் தாக்கி பேசினர். அகிலேஷ் யாதவ் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் -ஒழுங்கு கெட்டுவிட்டதோடு ஊழலும் அதிகரித்துவிட்டது என்றார். மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என்று அகிலேஷ் மீது மோடி கடுமையாக தாக்கி பேசினார். அதேசமயத்தில் தமது ஆட்சியில் செய்யப்பட்ட பணிகள் குறித்து அகிலேஷ் யாதவ் எடுத்துக்கூறி மக்களிடம் பிரசாரம் செய்தார். பகுஜன்சமாஜ் கட்சிக்கு இந்த முறை அதிக இடங்கள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. அதனால் பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கலாம் என்று தெரிகிறது. இதை மாயாவதி மறுத்து உள்ளார். தனிப்பெரும்பான்மை கிடைத்தால் ஆட்சி அமைப்போம். இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று கூறியுள்ளார். சிறுபான்மையினர் அதிகம் உள்ள பகுதிகளில் மாயாவதியும் அகிலேஷ்யாதவும் போட்டிபோட்டுக்கொண்டு பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிரபிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின்போது மோடி மீது கடுமையாக தாக்கி பேசினார். உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் நாட்டு மக்கள் தங்களுடைய பணத்தை எடுக்க வங்கிகளிலும் ஏடிஎம்.களிலும் வேலைக்கு போகமுடியாமல் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago