ராமேசுவரம் திருக்கோயிலில் மாசிமகாசிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
rms

ராமேசுவரம்,- ராமேசுவரம்  ராமநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில்  மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை  இரவு சிவாச்சாரியர்களால் வாஸ்து சாந்தி,மற்றும் கணபதி ஹோமம் பூஜைகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை  அதிகாலையில்  4  ம

ணி்க்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும்,தொடர்ந்து ஐந்து  கால பூஜைகளும் நடைபெற்றன.பின்னர் ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடகி அறைவாசல் மண்டபத்தில் எழுந்தருளினர்.அங்கு  ராமநாதசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க மூலாம் பூசப்பட்ட கொடிமரத்திற்கு கணபதி ஹோமம் பூஜையில் வைக்கப்பட்டு அங்கு  கலசங்களில் வைக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் தொடர்ந்து  திருக்கோயிலின் மூத்த குருக்கள் கணபதிராமன்  தலைமையில் குருக்கள்கள்  வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு  காலையில் 10,20 மணிக்கு திருவிழாவுக்கான கொடி ஏற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.பின்னர் சுவாமி,அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் ,தீபாராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருக்கோயில் தக்கார் குமரன் சேதுபதி, கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன்,உதவிக்கோட்டபொறியாளர் மயில்வாகனன்.கண்காணிப்பாளர்கள் ராஜாங்கம்,பாலசுப்பிரமணியன்,ககாரின்ராஜ்,இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன் உள்பட திருக்கோயில் அலுவலர்களும்,ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: