முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலை சங்கம் சார்பாக இண்டு-டெக்-பில்டு எக்ஸ்போ கண்காட்சி நடைபெற்றது:மத்திய தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேவையான தொழிற்சார்ந்த வளர்ச்சி திட்டங்களை மத்தியில் உள்ள பாரத் பிரதான் மந்திரியின் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என கிரிராஜ் சிங் தெரிவித்தார்.கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலை சங்கம் சார்பாக இண்டு-டெக்-பில்டு எக்ஸ்போ-2017 கண்காட்சி நடைபெற்றது. இதில் மத்திய சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் இணையமச்சர் கிரிராஜ் சிங் மற்றும் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி..ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சி அரங்குகளை திறந்துவைத்தனர். கலெக்டர் சி.கதிரவன் தலைமை வகித்தார். கூடுதல் தொழிற்சாலைகள் ஆலோசகர் சண்முகநாதன் வரவேற்புரையாற்றினார். எக்ஸ்போ குறித்து கருத்துகளை இன்டு-டெக்-பில்டு தலைவர் னுச.கே.ராமலிங்கம் கண்காட்சி அரங்குகளின் பயன்குறித்து எடுத்துரைத்தார்.மத்திய சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் இணையமச்சர் கிரிராஜ் சிங் உரையாற்றும் போது: அனைத்து தரப்பு மக்களுக்கு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தரமான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு சந்தைபடுத்துவதற்கு எம்.எஸ்.எம்.இ. முழு ஒத்துழைப்பு நல்கும். உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களுக்கும் அனைத்து உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேவையான தொழிற்சார்ந்த வளர்ச்சி திட்டங்களை மத்தியில் உள்ள பாரத் பிரதான் மத்திரின் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என கிரிராஜ் சிங் தெரிவித்தார்.மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியபொழுது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலைகள் நிறைந்த ஒசூரில் சுமார் 5-கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தர்கா இடம், கோனேரிப்பள்ளி, பேரண்டப்பள்ளி உள்ளிட்ட 5-இடங்களில் பொதுமக்களின் கோரிக்கையினையேற்று மேம்பாலங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் வழியாக பெங்க@ருக்கு மின்விளக்கு வசதி செய்து தரப்படும். மெட்ரோ ரயில் வசதி அமைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்தியாவில் இதுவரையில் 19-கிளஸ்டர்கள் வழங்கப்பட்டதில் அதில் 9-கிளஸ்டர்கள் தமிழகத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து கிருஷ்ணகிரிக்கு கிளஸ்டர் வழங்கப்படும். மேலும் ஒசூர் பகுதியை மையமாக கொண்டு ஒரு கண்டெய்னர் டெப்போ உருவாக்கப்படும். இதன் மூலம் கொச்சி வரையில் உள்ள துறைமுகங்களுக்கு சரக்குகளை எளிதில் கொண்டு செல்ல ஏதுவாக அமையும்.கிருஷ்ணகிரி ஒசூர் வழியாக பெங்க@ருக்கு மெட்ரோ ரயில் பாதை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அமையும் பட்சத்தில் தொழிலாளர்களுக்கும் நன்மையை ஏற்படுத்துவதோடு தொழில் வளர்ச்சி முன்னேற்றம் அடையும் என மத்திய கயிறு வாரிய தலைவர் பேசினார்.இந்நிகழ்ச்சியின்போது ஒசூர் சார் கலெக்டர் மரு.கே.செந்தில்ராஜ் ஸ்டேன் சிட்டா செயலாளர் (சென்னை) சி.கே.மோகன், உதவி தலைவர் கே.மோகன், சிட்பி ஏ.ஜி;.எம்.பாஸ்கர், தேசிய சிறு தொழிற்சாலைகள் கார்பரேசன் மேலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். விழா நிறைவில் ஒசூர் சிவில் என்ஜினியர்ஸ் சங்கத் தலைவர் கண்ணன் நன்றி தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago