முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கவர்னர் கொடுத்த அவகாசம் எதிரொலி : தமிழக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை - புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை  வாக்கெடுப்பு  இன்று தமிழக சட்டசபையில் நடைபெறுகிறது. இந்த  நம்பிக்கை தீர்மானத்தில் பங்கேற்று வாக்களிக்குமாறு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென  சபாநாயகரிடம் முன்னாள் அமைச்சர் மா.பா .பாண்டியராஜன் உள்ளிட்ட ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கவர்னர் உத்தரவு
தமிழகத்தில் முதல்வராக பதவியேற்குமாறு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் விடுத்த அழைப்பினை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்றார். அவரோடு 30 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார். ஆனால் ஆட்சியமைத்த 2-ம் நாளான இன்றே பெரும்பாண்மையை நிரூபிக்கும் நம்பிக்கை தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக இன்று சட்டசபை கூட்டத்தைக் கூட்ட சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கூவத்தூர் சென்று, எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அரசு கொறடா கடிதம்
இதைத்தொடர்ந்து அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 134 அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கும் தபால் மூலம் கடிதங்கள் அனுப்பியிருக்கிறோம். அதில் அரசை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் அனைவரும் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டவர்களுக்கும் தபால் மூலம் கடிதங்கள் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார்கள். அரசை ஆதரித்து தான் அவர்களும் வாக்களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.கவில் தான் உள்ளார்
இதைத்தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறாரே ?
பதில்: அதுபற்றி எனக்கு தெரியாது.
கேள்வி: முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா?
பதில்: அவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் அ.தி.மு.கவில்தான்  உள்ளார். முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கும் சேர்த்து தான் தபால் மூலம் கடிதம் அனுப்பியிருக்கிறோம். அவர் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க உறுப்பினர்கள் அரசை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கேள்வி: அவர்கள் எதிராக வாக்களித்தால் என்ன நிலை எடுப்பீர்கள்?
பதில்: அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். எதிர்த்து வாக்களித்தால் என்ன நிலை எடுப்போம் என்பதை இப்போது சொல்ல முடியாது. மேலும் ஒ.பன்னீர்செல்வம் அணி என்று செய்திகள் வெளியாகின்றன. அப்படியொரு அணி இல்லை, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இருந்தால் தான் அணி, 10 பேர் இருந்தால் அது நபர்கள் தான்.
கேள்வி: நாளை (இன்று) யார் தீர்மானம் கொண்டு வருவார்கள்?.
பதில்: நாளை (இன்று) சபைக்கு வாருங்கள், அப்போது தெரியும் என்றார் அவர்.

ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், செம்மலை, மாணிக்கம் உள்ளிட்ட எம்..எல்.ஏக்களுடன் தலைமை செயலகத்திற்கு வந்தார். சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினார். இதன்பின்னர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறுகையில் இன்று சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்போம் என்றார் அவர். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

அவை முன்னவர்
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் அவை முன்னவராக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்தார். ஏற்கனவே சட்டமன்ற அவை முன்னவராக ஒ.பன்னீர்செல்வம் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago