முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி - கருத்தரங்கு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

தேனி-தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து இன்று (17.02.2017) நடத்திய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
 கருத்தரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது, தமிழக அரசு தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வாழ்வில் முன்னேற என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதனை கண்டறிந்து தெரிவிக்கவும், மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் உள்ள வேலைவாய்ப்பினை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், தமிழக அரசின் மூலம் கடனுதவி பெற்று சுயதொழில் செய்து முன்னேற உள்ள வழிவகைகளை அறிந்து கொள்வதற்காகவும் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 82 இலட்சம் பேர்களும், மாவட்டத்தில் சுமார் 1,50,000 பேர்களும் அரசு வேலைவாய்ப்பு வேண்டி பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துள்ள அனைத்து நபர்களுக்கும் இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பு துறையின் மூலம் அரசு வேலை வழங்குவது சாத்தியமாகாது. எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (வுNPளுஊ), பணியாளர் தேர்வாணையம் (ளுளுஊ), வங்கிப்பணியாளர்கள் தேர்வாணையம் (ஐடீPளு), ஆசிரியர்கள் தேர்வாணையம் (வுசுடீ) மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் (வுNருளுசுடீ) தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்பவர்களை, தேர்வுகளை எவ்வாறு அணுகுவது அதில் வெற்றி பெறுவது எப்படி எனவும் இந்த தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் வாயிலாக மாணவ, மாணவியர்களுக்கு வல்லுநர்களால் எடுத்துரைக்க உள்ளனர். போட்டித்தேர்வு எழுதியவர்கள் அனைவரும் வெற்றியாளர்களாக முடியுமா என்ற நிலையில் தொழில் முனைவோராக ஆவது எப்படி எனவும் அதற்காக வாயப்புகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

 தேர்வாளர்கள் மதிப்பெண் பெற தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் கடினமாக படித்திட வேண்டும். தற்போது இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் எந்த துறை சம்பந்தப்பட்ட வினாக்களாக இருந்தாலும், இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து எளிதாக படித்து விடலாம். தமிழக அரசு சுயஉதவிக்குழுக்கள் மூலம் கடனுதவி அளித்து, அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றிவருவதோடு, இரண்டாம் கட்டமாக, கிராமங்களில் வாழும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு கடனுதவி அளித்து அவர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையச் செய்து வருகிறது.
நாம் எந்த தொழிலைச் செய்தாலும், அதில் வெற்றி பெற கல்வி அறிவு அவசியமாகிறது. தமிழக அரசு சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்காக நீட்ஸ் திட்டத்தின் மூலம் ஐந்து இலட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை 25 சதவிகித மானியத்தில் கடனுதவி வழங்கி வருகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வசதிகளையும் மாணவ, மாணவியர்களிடையே கொண்டு செல்லும் பொருட்டு தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. எனவே, இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் நன்கு பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி.பரமேஸ்வரிமகளிரியல் துறை இயக்குநர் (கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம்) முனைவர்.டெனிஸியாசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல்மாவட்ட நன்னடத்தை அலுவலர் சிவக்குமார்இந்திய இராணுவம் லெப்.கர்னல் (ஓய்வு) சுப்பையாஇளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்திபெரியகுளம் வட்டாட்சியர் சுருளிமைதீன்தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் கல்வி நிறுவனங்களின் பொது செயலாளர் ராஜமோகன் தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் மகேஸ்வரன்முதல்வர் முனைவர்.சித்ராகல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago