சேலம் கைலாஷ் மகளிர் கல்லூரியில் ஜஸ்னா விழா

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      சேலம்

சேலம் நங்கவள்ளியில் அமைந்துள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை அன்று "ஜஸ்னா" – 2017 கல்லூரி விழாவானது கல்லூரி வளாகத்தில் வெகுசிறப்பாக நடைப்பெற்றது. ஏ.வி.எஸ் மற்றும் சக்தி கைலாஷ் குழுமங்களின் தலைவர் க.கைலாசம், தலைமையேற்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் செயலாளர் கை.இராஜவிநாயகம், முதன்மையுரை ஆற்றினார். அடுத்து கல்லூரியின் தாளாளர் கை.செந்தில்குமார், வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி இயக்குநர் ச.அருண்குமார், வழிமொழிந்தார். கல்லூரியின் முதல்வர் பொறுப்பு வ.ஷெரின் வர்க்கீஸ், வரவேற்புரை நல்கினார். தொடர்ந்து விழாவின் சிறப்பு நாயகராக திரைப்பட பாடலாசிரியரும், கவிதையாளருமாகிய யுகபாரதி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பன்முகத்திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உரை ஆற்றினார். "செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது"என்ற குறளினை மெய்ப்பிக்கும் வகையில் சிறுதுளி மன்றத்தின் சார்பில் அன்பாலயா இல்லத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.50,000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காலை 10.00 மணி முதல் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனங்கள், மேற்கத்திய நடனங்கள், கிராமிய நடனங்கள், விழிப்புணர்வு நாடகங்கள் போன்ற 60க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை மாணவியர் அரங்கேற்றினர். இவ்விழாவின் இறுதியில் மேடையை அலங்கரித்த "ஜஸ்னா" – 2017 வெற்றிக் கோப்பையை பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற துறை மாணவியருக்கு கல்லூரித் தலைவர் வழங்கினார். இவ்விழாவில் அனைத்து ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டு கல்லூரி விழாவினை சிறப்பித்தனர்.

 


 

இதை ஷேர் செய்திடுங்கள்: