முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி டீ விற்பனையாளர்களுக்கு ஊக்குவிப்பு பரிசுகள்:கலெக்டர் வா.சம்பத், வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்டத்தில் ஊட்டி டீ விற்பனையாளர்களுக்கு ஊக்குவிப்பு பரிசுகளை கலெக்டர் வா.சம்பத், வழங்கினார். இது குறித்து கலெக்டர் தெரிவித்ததாவது:தமிழக அரசால் 2001-ல் நீலகிரி மாவட்டத்தில் தொழில் வணிக துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சிறு தேயிலை விவசாயிகள் நலனுக்காக பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்ட ஊட்டி டீ விற்பனையானது தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஊட்டி டீ - யானது நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தேயிலை கூட்டுறவு தொழிற்சாலைகளில் தரமாக உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் கூட்டுறவு சிறப்பங்காடிகள், ஆவின் பால் விற்பனையகங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஊட்டி டீ-யினை இந்த ஆண்டில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ததில் ஆண்டின் இலக்கினைவிட அதிகபடியாக விற்பனை செய்தவகையில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூவருக்கு தொழில் வணிக துறையின் சார்பாக ஊக்குவிப்பு பரிசு மற்றும் சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது தொழில் வணிக துறையின் சேலம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சு.இராமச்சந்திரன், உதவி இயக்குநர் (தொழில் கூட்டுறவு) சு.லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்