முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, தினகரன் வெங்கடேஷ் நீக்கம்: மதுசூதனன் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்குவதாக அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், புரட்சித் தலைவி அம்மாவிடம் கொடுத்த வாக்குறுதியான “அரசியலில் என்றும் ஈடுபடமாட்டேன், கட்சியிலும், ஆட்சியிலும் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் இல்லை, பொது வாழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பமும் இல்லை” என்று உறுதி அளித்ததை மீறி வி.கே.சசிகலா நடந்து கொண்டிருப்பதாலும், பல்வேறு கிரிமினல் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாலும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதாலும், இன்று முதல் அவர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்.கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.“புரட்சித்தலைவி அம்மாவிடம் அளித்த வாக்குறுதியை மீறி, அம்மாவுக்கு துரோகம் செய்த, அவரது விருப்பத்திற்கு மாறாக, கழகத்திலிருந்து அம்மாவால் பல ஆண்டு காலமாக நீக்கி, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த டி.டி.வி. தினகரனையும், டாக்டர் வெங்கடேசையும் எவ்வித அதிகாரமும் இல்லாமல் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பு இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு மதுசூதனன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்