முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரபணுக்களின் மாதிரிகளை சமர்ப்பிக்க உத்தரவு: வடகொரியா அதிபரின் சகோதரர் உடலை பெறுவதில் சிக்கல்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

கோலாலம்பூர்  - மலேசியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரரின் உடலை பெற அவரது உறவினர்களின் மரபணுக்களின் மாதிரிகளை சமர்ப்பிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

படுகொலை
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னின் சகோதரர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வியட்நாம் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.

தீவிர விசாரணை
இந்நிலையில், கிம் ஜாங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரரான (தந்தையின் சகோதரர் மகன்) கிம் ஜாங் நாம் மலேசியாவில் 6-2-2017 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மலேசிய போலீசார் வியட்நாம் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

3 பேருக்கு வலை
இந்த கொலையில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருவதாகவும், வெளிநாட்டை சேர்ந்த ஒரு கும்பலின் சதி திட்டப்படி, இரண்டு பெண்கள் கிம் ஜாங் நாம்-ஐ கொன்றதாக சந்தேகிக்கப்படுவதாகவும் மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

வடகொரியா கோரிக்கை
இந்நிலையில், கிம் ஜாங் நாம்-ன் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு மலேசிய அரசுக்கு வடகொரியா அரசு தகவல் அனுப்பி இருந்தது. இதுதொடர்பாக, மலேசிய போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிம் ஜாங் நாம்-ன் உடலை அடையாளம் காட்டவோ, இறந்தது அவர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தெரிவிக்கவோ அவரது உறவினர்களில் யாரும் இன்னும் முன்வரவில்லை.

மரபணு பரிசோதனை
கிம் ஜாங் நாம்-ன் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்னதாக அவரது உறவினர்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அந்த பரிசோதனைக்கு பிறகுதான் உடலை வடகொரியாவிடம் ஒப்படைக்க முடியும் என மலேசியாவின் செலாங்கோர் மாவட்ட போலீஸ் உயரதிகாரி அப்துல் சமா மட் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago