இந்தியாவுக்கு ஒத்துழைப்பு: அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் உறுதி

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      உலகம்
america(N)

வாஷிங்டன் - இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர்.

உறுப்பினர்கள் பதவியேற்பு
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கிளாரி கிளிண்டன் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தார். இதனையடுத்து கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றார். அவருடன் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்றனர்.

வரவேற்பு
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சிங் சர்னா கலந்து கொண்டார். அப்போது, இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர். இருநாடுகளுக்கு இடையிலான உறவு மாறாமல் இருக்க ஆதரவு அளிக்கப்படும் என்றனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்: