வலுவான ஆதாரங்கள் இருந்தால் மசூத் ஆசாருக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்போம்: சொல்கிறது சீனா

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      உலகம்
Masood Azhar

பெய்ஜிங்  - மசூத் ஆசாருக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்க உறுதியான ஆதாரம் தேவைப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.

பதான்கோட் தாக்குதல்
கடந்த ஆண்டு ஜனவரியில் பதான்கோட் விமான தள தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி மசூத் அசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா.வுக்கு இந்தியா கடிதம் எழுதியது. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான தீர்மானத்துக்கு, வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. தனது நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானை திருப்திபடுத்தும் வகையில் சீனா இவ்வாறு நடந்துகொள்வதாக நம்பப்படுகிறது.

பேச்சுவார்த்தை
இந்த நிலையில், வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி இந்திய வெளியுறவு செயலர் எஸ் ஜெயசங்கர் மற்றும் சீனா பிரநிதிகள் இடையே முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த தகவலை சீனாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பும் சர்வதேச மற்றும் பிராந்தியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


சீனா அறிவிப்பு
என்.எஸ்.ஜி மற்றும் மசூத் ஆசார் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே வேறுபாடு நிலவுவது குறித்து கேட்ட போது, வேறுபாடுகள் இயற்கையானது என்று தெரிவித்தார். மசூர் ஆசாத் விவகாரத்தை பொறுத்தவரை வலுவான ஆதாரங்கள் இருந்தால் ஐநாவில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும் சீனாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: