76 பயங்கரவாதிகளை ஆப்கான் ஒப்படைக்க வேண்டும் : பாகிஸ்தான் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      உலகம்
pakistan(N)

இஸ்லமாபாத்  - பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாதிகள் பட்டியல்
ஆப்கானிஸ்தானின் பிராந்தியத்திற்குட்பட்ட பகுதியில் பதுங்கியிருக்கும் 76 தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலை அந்நாட்டிடம் பாகிஸ்தான் ராணுவம் அளித்தது. மேலும், பட்டியலில் உள்ள பயங்கரவாதிகளை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

பாக். மறுப்பு
பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகளை ராணுவ தலைமையகத்துக்கு நேரில் அழைத்து தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலை அளித்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர்  தெரிவித்தார். இருப்பினும் பட்டியலில் கூறப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் பெயரை பாகிஸ்தான் கூற மறுத்துவிட்டது.


எல்லையை மூடியது
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை உடனடியாக மூடப்படுவதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் நடப்பு வாரத்தில் பயங்கரவாத தாக்குதல் அடுத்தடுத்து நடத்தப்படும் நிலையில், இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நேற்று முன்தினம் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: