ரேபரேலியில் ராகுல் - பிரியங்கா ஒரே மேடையில் பிரசாரம்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      அரசியல்
rahul priyanka(N)

லக்னோ  - ரேபரேலியில் நடந்த காங்கிரஸ் பிரசாரக் பொதுக் கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டனர்.

இறுதிக்கட்ட பிரசாரம்
உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 73 தொகுதிகளுக்கு கடந்த 11-ந்தேதியும், 2-வது கட்டமாக 67 தொகுதிகளுக்கு கடந்த 15-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. 3-வது கட்டமாக 69 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று நடைபெற்றது.

காங். - சமாஜ்வாடி கூட்டணி
403 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட உ.பி.யில் ஆளுங்கட்சியான சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. சமாஜ்வாடி கட்சி 298 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

முதல் பிரசார கூட்டம்
இந்நிலையில், சோனியா காந்தியின் பாரம்பரியமான மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில், கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டனர். பிரியங்கா பங்கேற்கும் முதல் பிரசார கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரான அதிதி சிங்கை ஆதரித்து இருவரும் உரையாற்றி, வாக்கு சேகரித்தனர். ரேபரேலி தொகுதியில் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: