முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசா நடைமுறையை எளிமையாக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்காவுக்கு வரும் முஸ்லிம்களுக்கு விசா வழங்குவது தொடர்பான அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு கோர்ட் தடை விதித்துள்ள நிலையில் விசா நடைமுறையை எளிமையாக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது முன்வந்துள்ளார்.

கடும் அதிருப்தி
அமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவுகள் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இடைக்கால தடை
இவரது குடியுரிமை மற்றும் விசா கொள்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டிரம்ப்பின் கொள்கை முடிவுகள் மீது அதிருப்தி தெரிவித்த வாஷிங்டன் நீதிமன்றம், அதிபரின் உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடையும் விதித்திருந்தது.

நிபுணர்கள் ஆலோசனை
இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப், 'அரசின் குடியுரிமை மற்றும் விசா தொடர்பான முந்தைய உத்தரவை கோர்ட்டின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைப்பது தொடர்பாக நாட்டின் தலைசிறந்த சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்' என தெரிவித்தார்.

திடீர் மனமாற்றம்
முன்னதாக, கோர்ட்டின் தடை உத்தரவை வெகு மோசமான முடிவு, நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான முடிவு என டிரம்ப் விமர்சித்திருந்தது, குறிப்பிடத்தக்கது. டிரம்ப்பின் இந்த திடீர் மனமாற்றம், எங்களுக்கு கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி என்று வாஷிங்டன் மாநில அட்டார்னி ஜெனரல் பாப் பெர்குசன் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago