ஓமன் நாட்டில் கேரள நர்சு படுகொலை

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      இந்தியா
kerala nurse(N)

திருவனந்தபுரம் - ஓமன் நாட்டில் அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டில் நர்சு ஷெபின்ஜீவன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இடுக்கியை சேர்ந்தவர்
கேரளாவை சேர்ந்த நர்சுகள் வெளிநாடுகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அதிகளவு பணிபுரிந்து வருகிறார்கள். வளைகுடா நாடுகளிலும் அதிகளவு கேரள நர்சுகள் பணியில் உள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடும்கண்டம் பகுதியை சேர்ந்தவர் ஷெபின்ஜீவன் (வயது 30). இவர் ஓமன் நாட்டில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவருடன் இவரது கணவரும் வசித்து வருகிறார்.

படுகொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம், தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டில் நர்சு ஷெபின்ஜீவன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை. இதனால் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷெபின்ஜீவனின் கணவர் மீதும் போலீசாரின் சந்தேக பார்வை திரும்பி உள்ளது. எனவே அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


2-வது படுகொலை
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமன் நாட்டில் தங்கி பணிபுரிந்து வந்த சிந்து (21) என்ற கேரள பெண் படுகொலை செய்யப்பட்டார். கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலையில் இன்னும் குற்றவாளி சிக்காத நிலையில் தற்போது மேலும் ஒரு கேரள பெண் கொலை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: