டெல்லி பள்ளி ஒன்றில் எலி கிடந்த உணவை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு சிகிச்சை

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      இந்தியா
rat food(N)

புதுடெல்லி  - டெல்லி, பள்ளி ஒன்றில் எலி இறந்து கிடந்த உணவை சாப்பிட்ட 9 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்து கிடந்த எலி
புதுடெல்லியில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் மதியம் வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்து உள்ளது. இதனை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ட்விட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில், அரசு பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் இருந்து இறந்த எலி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மாணவர்களுக்கு சிகிச்சை
9 பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். நான் மருத்துவர்களிடம் பேசிஉள்ளேன், மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர், என்று குறிப்பிட்டு உள்ளார்.  இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி அரசு எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.


கண்காணிப்பு
இன்று முதல் (நேற்று)முதல் உணவு அறையில் மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவுகளை எங்களுடைய அதிகாரிகள் கண்காணிப்பார்கள் எனவும் மணிஷ் சிசோடியா கூறிஉள்ளார். எலி இறந்து கிடந்த உணவு தியோலி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மதன் மோகன் மால்வியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: