எஸ்.கே.கவுல் உள்பட 5 நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவியேற்பு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      இந்தியா
sk kaul(N)

புதுடெல்லி  - சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனம் தொடர்பான மத்திய அரசின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதையடுத்து, எஸ்.கே.கவுல் உள்பட 5 புதிய நீதிபதிகள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.

8 நீதிபதிகள்
நாட்டின் தலைமை நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 31 ஆக உள்ள நிலையில், அங்கு தேங்கி கிடக்கும் வழக்குகளை 23 நீதிபதிகள் மட்டுமே விசாரித்து வந்தனர். மீதியுள்ள 8 நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைமுறைகள் நிறைவுபெற்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி நவீன் சின்ஹா, கேரள மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி மோகன் ஷாந்தனா கவுடர், சத்தீஸ்கர் மாநில தலைமை நீதிபதி திபக் குப்தா, கர்நாடக மாநில ஐகோர்ட் நீதிபதி அப்துல் நசீர் ஆகியோரின் பெயர்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

28 ஆக உயர்வு
இந்த பரிந்துரையை மத்திய சட்டத்துறையும் ஏற்றுக் கொண்ட நிலையில், நீதிபதிகள் நியமனத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, 5 நீதிபதிகளும் நேற்று சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, நாட்டின் தலைமை நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.


இதை ஷேர் செய்திடுங்கள்: