முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் : அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - வருகிற மே மாதம் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேச, பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார்.

புதிய அதிபர்
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறார். தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் பேசும்போது, இந்தியாவோடு உறவை மேம்படுத்துவேன் என்று கூறினார். அதேபோல் அவர் பதவி ஏற்றதும் இதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார். டொனால்டு டிரம்ப் அதிபராக தேர்வு பெற்றதும் பிரதமர் மோடி அவருக்கு டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார்.

பல்வேறு விவகாரங்களில்...
பின்னர் அதிபராக பதவி ஏற்றதை தொடர்ந்து டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடியை டெலிபோனில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசினார். அப்போது ராணுவம், பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் போன்றவை தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது பற்றி விரிவாக அவர் பேசினார். இதைத்தொடர்ந்து அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் பாத்தீஸ், இந்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கரை தொடர்பு கொண்டு ராணுவம், பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு வி‌ஷயங்களை பேசினார். அதேபோல் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் தில்லர்சன், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு பேசினார்.

எம்.பிக்கள் குழு
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மைக் பிளைனை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து 19 பேர் கொண்ட அமெரிக்க எம்.பி.க்கள் குழு ஒன்று டெல்லி வருகிறது. அவர்கள் டெல்லி, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். சமீபத்தில் டொனால்டு டிரம்ப் வெளிநாட்டினருக்கு விடுத்த கட்டுப்பாடுகள் தொடர்பாக இந்தியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்-1பி விசா கெடுபிடியால் இந்திய தகவல் தொடர்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஜி-20 மாநாடு
இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறார். ஜெர்மனியில் வருகிற ஜூலை மாதம் ஜி.20 நாடுகள் மாநாடு நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் டொனால்டு டிரம்பும் கலந்து கொள்வார். அப்போது இருவரும் சந்தித்து பேசுவதாக திட்ட மிடப்பட்டு இருந்தது. ஆனால், பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் முன்கூட்டியே டொனால்டு டிரம்பை சந்திக்க மோடி முடிவு செய்தார்.

மே மாதம் பயணம்
அதேபோல் டொனால்டு டிரம்பும் மோடியை சந்திக்க விரும்புகிறார். இதனால் முன்கூட்டியே இந்த சந்திப்பு நடைபெற இருதரப்பினரும் ஏற்பாடு செய்து வருகிறார்கள். மே மாதம் முதல் வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பிரதமர் மோடி மே மாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளும், இது தொடர்பான மற்ற பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago