கனடா நாட்டிற்கான இந்திய தூதராக விகாஸ் ஸ்வரூப் நியமனம்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      இந்தியா
vikas swarup(N)

புதுடெல்லி  - மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளராக உள்ள விகாஸ் ஸ்வரூப் கனடா நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த அதிகாரி
1986 ஐ.எஃப்.எஸ் மூத்த அதிகாரியான விகாஸ் ஸ்வரூப்மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார்.  இந்நிலையில், கனடா நாட்டிற்கான இந்திய தூதராக விகாஸ் ஸ்வரூப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்கர் விருது
இந்திய வெளியுறவுப் பணியை சேர்ந்த அதிகாரியான ஸ்வரூப் முன்னதாக வெளியுறவுத்தறையின் ஐ.நா.,சபையின் அரசியில் பிரிவின்  இணை செயலாளராக பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். 2009-ம் ஆண்டு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர்ஸ் திரைப்படத்தி்ன் கதையை விகாஸ் ஸ்வரூப் தான் எழுதினார். இந்த நாவல் அரபிக், பிரஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட 43 மொழிகளில் வெளியிடப்பட்டது என்பது குறி்ப்பிடத்தக்கது.


இதை ஷேர் செய்திடுங்கள்: