முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா முப்பெரும் விழா

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      ஈரோடு

1992-ஆம் ஆரம்பிக்கப்பட்ட, சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரி, இந்த ஆண்டு இருபத்தி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி வெள்ளி விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.  பாரதியார் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட, ஈரோடு மாவட்ட கல்லூரிகளில் முதன்முறையாக தொடங்கப்பட்ட இருபாலர்களும் பயிலும் சுயநிதிக் கல்லூரி என்ற பெருமைக்குரியது, சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.1992-ஆம் ஆண்டு 3 பாடப்பிரிவுகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்போது 17 இளநிலை பாடப்பிரிவுகளையும், 8 முதுகலைப் பாடப்பிரிவுகளையும், 2 பட்டய ஆராய்ச்சி பாடப் பிரிவுகளையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.  வெள்ளி விழா ஆண்டினை ஒட்டி ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஏர்லைன் கேட்டரிங் மேனேஜ்மென்ட் என்ற துறையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் பயன்பெற கல்லூரி நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.

வெள்ளிவிழா மலர்

இவ்விழாவினை, ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர்,  டி ஜெயலட்சுமி தலைமையேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்கள் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர், கலந்து கொண்டார்.  வெள்ளி விழாவில் ஈரோடு                   லோட்டஸ் மருத்துவமனை, டாக்டர்   ஈ.கே.சகாதேவன் இயக்குநர், ஆகியோர்  சிறப்புரையாற்றினர்.  இவ்விழாவில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்களை சேன் கட்டிடக்கலை கல்வி நிறுவனம் செயலாளர் டி கிரி,  மற்றும்.  ஈரோடு,  ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நிர்வாக இயக்குநா பாலகுமார், ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்கள்.  கல்லூரி முதல்வர் பங்கேற்று, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.  வெள்ளி விழாவையொட்டி வேளாளர் கல்லூரி தாளாளர்சந்திரசேகர்,  வெள்ளிவிழா மலரினை வெளியிட, லோட்டஸ் மருத்துவமனை இயக்குநர்சகாதேவன் பெற்றுக் கொண்டார்

பல்கலைக்கழகமாக விளங்கும்

வேளாளர் கல்வி நிறுவனங்களின்  தாளாளர்,  சந்திரசேகர், ஈரோடு பேசுகையில், ஸ்ரீ அம்மன் கல்லூரியின் தாளாளர்  தனியொரு பெண்மணியாக இந்த கல்லூரியை ஆரம்பித்து, தற்போது வெள்ளி விழா காண செய்துள்ளார்.  தாயுள்ளம் படைத்தவர். செய்நன்றி மறவாதவர், பல ஏழை மாணவர்களுக்கு பிறர் அறியாது இலவச கல்வி வழங்கி வருகிறார்.  வெள்ளிவிழா கண்ட அம்மன் கல்லூரி விரைவில் பல்கலைக்கழகமாக விளங்கும் என கூறினார்.

சிறப்பு விருந்தினராக இவ்விழாவில் பங்கேற்றஈரோடு h லோட்டஸ் மருத்துவமனை, ,  சகாதேவன், இயக்குநர் பேசுகையில், நாம் பிறக்கும் போது எதுவும் கொண்டுவருவதில்லை.  நம் கடின உழைப்பால் மட்டுமே அனைத்தையும் பெற முடியும்.           ஸ்ரீ அம்மன் கல்லூரியின் தாளாளர் ஜெயலட்சுமி கடின உழைப்பால் தான் முன்னேறியிருக்கிறார்.  கல்லூரியின் தாளாளரை உதாரணமாக கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் என கூறினார்.  கடவுள் நமக்கு அளித்தவற்றைக் கொண்டு இன்பமுற வாழ வேண்டும் எனவும், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறியதைப் போல் பொது அறிவியல் கல்வியுடன், உணர்ச்சியை கையாளுதல் மற்றும் ஆன்மீக அறிவு ஆகியவற்றையும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், தனி மனிதர்கள் சமுதாயத்திற்கு பங்காற்ற வேண்டுமென்றும், இதையெல்லாம் பயின்று சென்றால் பல்வேறு நாடுகளில் பல்துறை சார்ந்த தொழில்களிலும் நம் தமிழ்நாட்டின் அரசியலிலும் சிறந்த பங்காற்றலாம் என கூறினார்

தாயுள்ளம் படைத்த தாளாளார்

அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பேரவையின் தலைவர்.  முகமது இம்ரான் பேசுகையில், கல்லூரியின் தாளாளர் அவர்களின், வளர்ச்சிக்கு அவர்களது தன்னம்பிக்கையும், மன வலிமையும், விடா முயற்சியுமே காரணம் என கூறி வெள்ளி விழா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பிறகு, அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவரும், கன்னியாகுமரி குழித்துறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமாகிய அப்துல் சலாம் 1995-ம் ஆண்டு நான் இக்கல்லூரியில் உயர்கல்வி படிப்பதற்காக சேர்ந்தேன்.  என் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு நமது தாளாளர்  என்னை கல்லூரியில் இலவசமாக படிக்க வைத்தார் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.  மேலும், தாயுள்ளம் படைத்த தாளாளர்  பல மாணவர்களை கட்டணமின்றி படிக்க வைத்து வருகிறார் எனவும் கூறினார்.அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவரும், பேரவையின் செயலாளரும் அவிவா லைப் இன்ஸ்சூரன்ஸ்ஸின் பயிற்சியாளருமான செந்தில் ராஜா நம் கல்லூரி வெள்ளி விழா காண்பது மகிழ்ச்சி அளிக்கிறதென்று கூறி, முன்னாள் மாணவர்கள் “ஆசை” அமைப்பின் சார்பாக வெள்ளி விழா அரங்கம் கட்ட ரூ.40,000 முன்பணமாக வழங்கினார்..

பொன்விழா காண வாழ்த்துகிறோம்

ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மற்றும் அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவர்  மக்கள் ஜி ராஜன், பேசுகையில, வெள்ளிவிழா காண்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பொன்விழா காண எங்கள் முன்னாள் மாணவர் அமைப்பு “ஆசை” சார்பாக வாழ்த்துகிறோம் எனவும் கூறினார்.இவ்விழாவில், கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய முன்னாள் முதல்வர்கள், பேராசியர்கள், வழக்கறிஞர் அருட்செல்வன்,  யாழி. மதிவாணன, தாளாளர் செங்குந்தர் பொறியியல் கல்லூரி ஈரோடு. சாந்தலட்சுமி- செகரட்ரியேட், மருத்துவர் சரோஜா துரைராஜ், முனைவர் சாந்தகுமாரி, அருட்சகோதரி. ரீனா, ஆடிட்டர் துரைசாமி மற்றும் பலர் கலந்துகொண்டு வெள்ளி விழாவினைச் சிறப்பித்தனர்.கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவின் இறுதியில், சிறப்பாக அமைய உதவிய அனைவருக்கும் மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர். எ ராஜேஷ் நன்றியுரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ அம்மன் கல்லூரியின் முதல்வர்      .எம். சதீஷ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.(

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago