ஆதார் மையத்தில் 4 மாதத்தில் 3 ஆயிரம் பேர் பதிவு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      ஈரோடு

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேண்டீன் கீழ்தளத்தில் அரசு சார்பில் ஆதார் பதிவு மையம் இயங்கி வருகிறது. 4 மாதங்களுக்கு முன்பு துவங்கிய இந்த ஆதார் பதிவு மையத்தில் தினமும் ஆதார் அட்டை கோரி வரும் மக்கள் தங்கள் பெயர்களை இங்கு பதிவு செய்து செல்கின்றனர். அதன்படி கடந்த 4 மாதங்களில் இதுவரை 3 ஆயிரம் பேர் ஆதார் அட்டை கோரி தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: