பறக்கும்படை சோதனை ரூ.1 லட்சம் அபராதம்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      ஈரோடு

அந்தியூரை அடுத்த, வெள்ளித்திருப்பூர், மைலம்பாடி, ஒலகடம், நால்ரோடு பகுதிகளில், மாவட்ட போக்குவரத்து பறக்கும்படை அலுவலர் வெங்கட்ரமணி தலைமையில் ஆய்வாளர்கள் தாமோதரன், நித்யா ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு, தகுதிச் சான்று இல்லாதது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றது, தார்பாய் போடாத மண் லாரிகள் என, ஆட்டோ, கார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் அபராதம் செலுத்தும்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. சோதனையில் மொத்தம், ஒரு லட்சத்து, 1,800 ரூபாய் வசூலானது

இதை ஷேர் செய்திடுங்கள்: