முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி:அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      சேலம்

சட்டமன்றத்தில் நேற்று நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதை அடுத்து நேற்று மாலை அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். சட்டபேரவையில் நேற்று மதியம்நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 122 உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற வெற்றி பெற்று அரசை தக்க வைத்துக் கொண்டார்.இதையடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். சேலத்தில் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை அருகில் நேற்று மாலை 5 மணியளவில் அதிமுகவினர் ஏராளமானோர் ஒன்று கூடி முன்னாள் மேயர் எஸ்.சவுண்டப்பன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்குஇனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி,சரவணன்,ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணமணி,எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, இணைச் செயலாளர் ஏ.இ.சுகுமார்,முன்னாள் கவுன்சிலர்கள் முருகன்,.பழனி,அதிமுக நிர்வாகிகள் நெல்லை சங்கரமணி,கொண்டலாம்பட்டி ராமசுப்பிரமணியன்,சில்க் ராமச்சந்திரன்,மகளிரணி ஈஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்