கட்டில்கள் மூலம் கூட்டத்தை கூட்டமுடியாததால் சைக்கிளில் பயணம் செய்கிறார் ராகுல் காந்தி: ராஜ்நாத் சிங் கிண்டல்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      அரசியல்
Rajnath Singh 2016 10 2

ஜலாவுன்,(உ.பி.], கட்டில்கள் வழங்கியதன் மூலம் மக்கள் கூட்டத்தை ஈர்க்க முடியாமல் தோல்வி அடைந்த ராகுல் காந்தி சைக்கிளில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார் என்று ராகுல் காந்தி மீது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல் அடித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 3-வது கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் முடிந்துவிட்டதால் 4-வது கட்ட தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஜலாவுன் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று மதோஹர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல் மீது தாக்கு:

தேர்தல் பிரசார கூட்டங்களை மைதானத்திலோ அல்லது வெட்டவெளியிலோதான் நடத்துவார்கள். அப்போது மக்கள் கூட்டம் எவ்வளவு இருக்கும் என்று தெரிந்துவிடும். எந்த கட்சிக்கு கூட்டம் என்பதையும் மக்கள் பார்த்துவிடுவார்கள். இதை விட்டு விட்டு
மக்கள் கூட்டத்தை இழுப்பதற்காக அவர் பேசும் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கட்டில்கள் வழங்கப்பட்டது. இதனால் மக்கள் கூட்டத்தை அவரால் இழுக்க முடியவில்லை. தற்போது புதிய யுக்தியை அவர் கையாண்டு உள்ளார். அவர் சைக்கிளில் பயணம் செய்து மக்கள் கூட்டத்தை இழுக்கப்பார்க்கிறார். இதிலும் ராகுலால் மக்கள் கூட்டத்தை இழுக்க முடியாது. அதுவும் பஞ்சரான சைக்கிளில் ராகுல் பயணம் செய்கிறார். [ சமாஜ்வாடி கட்சியின் சின்னம் சைக்கிள்] கட்டில்கள் வழங்குவது மூலம் மக்கள் கூட்டத்தை கூட்ட முடியாது என்று உணர்ந்துள்ள காங்கிரஸ் இந்த புதிய யுக்தியை கையாண்டு வருகிறது.

ஆட்சி அமைப்பு:

கடந்த 2014-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில மக்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்ததால்தான் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  ஆட்சி அமைக்க முடிந்தது. இதற்காக மாநில மக்களை நான் பாராட்டுகிறேன். இது இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் 73-ல் பாரதிய ஜனதா வெற்றிபெற்றது. இதனால்தான் மத்தியில்  காங்கிரஸ் அல்லாத அரசை அமைக்க முடிந்தது. லக்னோ பாராளுமன்ற தொகுதியில் இருந்து ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்: