முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைவினைஞர்கள் திறனக்கான மின் தொகுப்பு:கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்திலுள்ள அனைத்து கைவினைஞர்களைப் பற்றியும் அவர்களது திறமைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்து அவர்களுக்கென இணையதளம் உருவாக்க தமிழக அரசு, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டம் 2015-16 ஆம் ஆண்டின் கீழ் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் நிறுவனத்திற்கு ஆணை வழங்கியுள்ளது.இந்த இணையதளத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கைத்திறன் கைவினைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பக்கங்கள் உருவாக்கப்படவுள்ளது. இதில் கைவினைஞர் மற்றும் அவர்களது திறமைகள் பற்றிய அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். இதன் மூலம் கைவினைஞர்கள் பற்றிய அனைத்து விபரங்களும் அரசின் கவனத்திற்கு வருவதுடன் சமூக வலைதளங்கள் மூலம் உலகளாவிய சந்தையினை சென்றடைய வழிவகை செய்யப்படும்.தமிழகத்திலுள்ள அனைத்து கைத்திறன் கைவினைஞர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, இந்நிறுவனத்தின் சார்பில் கணக்கெடுக்க வரும் அதிகாரிகளிடம் கைவினைஞர் மற்றும் அவர்களது திறமை பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக உரிய படிவத்தினை என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், 759, அண்ணா சாலை, சென்னை - 600 002, என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கலாம்.இந்த வாய்ப்பினை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago