விழுப்புரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      விழுப்புரம்
4

விழுப்புரம்.

 

விழுப்புரம் கலெக்டர்அலுவலக கூட்டரங்கில், மேன்மைமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமைக் கருவேல் மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பாக வருவாய்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, கால்நடை பராமரிப்புத்துறை, இந்து அறநிலையத்துறை மற்றும் சமூக வனத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர்இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.இதற்கென வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் சமூக வனத்துறை அலுவலர்களைக் கொண்ட குழு மேற்குறித்த துறைகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை மதிப்பீடு செய்து வெளிப்படையான ஏலம் விட்டு உள்ளாட்சி அமைப்புகளில் எவ்வித செலவினமும் மேற்கொள்ளாமல், அரசுக்கு வருவாய் ஈட்டத்தக்க வகையில் அரசு விதிமுறைகளின்படி 27.02.2017க்குள் சீமைக் கருவேல் மரங்களை முற்றிலும் அகற்றிடவும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமை கருவேல் மரங்களையும் இட உரிமையாளர்களை கொண்டு முற்றிலும் அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர்இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சரயு திண்டிவனம் சார் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் மாவட்ட வன அலுவலர் ஆனந்த்,இ.வ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மகேந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: