நாசரேத் மர்காஷிஸ் பொன்விழா ஆண்டை முன்னிட்டு ரூ. 40 லட்சம் மதிப்பில் கல்லூரி கட்டிடம்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
  40

நாசரேத்,

 

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி தொடங்கப்பட்டு 50-வது ஆண்டினை பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொன்விழா ஆண்டு விழா குழு கன்வீனர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் முனைவர் ஏ.டி.கே.ஜெயசீலன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் பொருளியல் துறைத் தலைவர் பேரா.ராஜாமணி ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் முன்னாள் பேரா.கிப்ட் ஜெயக்குமார், கல்லூரி நிதியாளர் முனைவர் ஆசைதம்பி தாசன், துறைத் தலைவர்கள் பிரின்ஸ், முனைவர் ஜெயபாலன் கென்னடி, முனைவர் அந்தோணி செல்வகுமார் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பொன்விழா ஆண்டினை முன்னிட்டு புதிய நிர்வாக கட்டிடம் சுமார் 40 லட்சம் செலவில் கட்டவும் கல்லூரி அளவிலான கலை, இலக்கியப் போட்டிகளான வினாடி வினா, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்திட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் கல்லூரி முதல்வர்கள், முன்னாள் கல்லூரிச் செயலர்கள். துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணி நிறைவு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவ, மாணவியர்களை ஒருங்கிணைத்து பல்வேறு குழுக்கள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. முன்னாள் பேராசிரியர் கிப்ட் ஜெயக்குமார் நிறைவு ஜெபம் செய்தார். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் ஆலோசனையின்படி நிதியாளர் ஆசைதம்பி தாசன், அலுவலர்கள் நவநீதன், ஸ்டேன்லி, விமல் ஆகியோர் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: