சங்கரன்கோவிலில் அதிமுகவினர் கொண்டாட்டம்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
snkl

சங்கரன்கோவில்.

 

சங்கரன்கோவிலில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதை அதிமுகவினர் கொண்டாடினர்.சங்கரன்கோவில் பஸ்நிலையம் அருகே அதிமுக தொகுதி இணை செயலாளர் வேல்ச்சாமி தலைமையில் கட்சியினர் வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அப்போது முதல்வருக்கு ஆதரவாகவும், திமுவினருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பினர்.இதில், நகர பொருளாளர் பரமகுருநாதன், ஒன்றிய பேரவை செயலாளர் சண்முகையா, நகர எம்ஜிஆர் இளைஞரணி தலைவர் சவுந்தர், வழக்கறிஞர்கள் செல்வகுமார், காந்திகுமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயலட்சுமி, ராமதுரை, கூட்டுறவு சங்க தலைவர் லட்சுமணன், மாநில பேச்சாளர் ராமசுப்பிரமணியன், முகம்மது ஜலீல், ஒன்றிய நிர்வாகிகள் கிரு~;ணசாமி, முத்துப்பாண்டி, உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: