முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரணை கிராமத்தில் விட்டுத் தோட்டம் இயற்க்கை உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் காரணை கிராமத்தில் குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சார்பில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு நிர்வாகிகளுக்கு வீட்டுத் தோட்டம் அமைக்கும் முறைகள் மற்றும் இயற்கை உரங்கள் தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது, இப்பயிற்சியில் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டங்கள் அமைத்து அதன் மூலம் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை இயற்க்கையான உரங்கள் மூலம் நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்வது கூட்டு முறையில் உற்பத்தியில் ஈடுபட்டு வியாபாரம் செய்வது, குறித்தும் அதற்கான சந்தை வாய்ப்புகள், அரசின் மானியங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. பஞ்சகாவியம், வேம்பு கரைசல், பூச்சு விரட்டி, மண்புழு உரம் போன்றவைகள் தயாரித்தல் முறைகள் குறித்து செய்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது. இப்பயிற்சியில் காரணை முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தன்னார்வலர் ஷியாம்சுந்தர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். குழந்தைகள் கண்காணிப்பகத்தின் நிர்வாகி து.ராஜ் பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வீட்டுத் தோட்டம் அமைக்க தேவையான விதைகள் மற்றும் இயற்கை உரங்களும் வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழு நிர்வாகிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்