முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி சீமை கருவேல் மரங்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடக்கிறது : கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி சீமை கருவேல் மரங்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தாதம்பாளையம் மற்றும் வீரராக்கியம் ஏரிப்பகுதியில் சீமை கருவேல் மரங்களை அகற்றும் பணியினை நேற்று (17.02.2017) மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

நீதிமன்ற உத்தரவு

 

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:நீதிமன்ற உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் சீமை கருவேல் மரங்களை அகற்றும் பணி 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்களில் முழுமையாக முடிவுற்றது. தாதம்பாளையம், வீரராக்கியம், வெள்ளியணை, உப்பிடமங்கலம் போன்ற ஏரிப்பகுதிகளில் அதிக நிலப்பரப்பில் சீமை கருவேல் மரங்கள் உள்ளன. இவைகளை ஓசூர் பகுதியிலிருந்து இப்பணிகளை மட்டும் தினக்கூலி அடிப்படையில் திறம்பட செய்யும் பணியாளர்களைக் கொண்டு இயந்திர ரம்பங்கள் மற்றும் நவீன கருவிகள் மூலம் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுபணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை இணைத்து இப்பணிகளை விரைவில் முடிப்பதற்கு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும், இப்பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் வழக்கறிஞர் ஆணைக்குழுவினர்களிடம் இதுவரை முடிவுற்ற பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டன. மேலும், துறை வாரியாக சீமை கருவேல் மரங்களை அகற்றும் பணிகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டன. க்ரஸர், ஜேசிபி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை ஒருங்கிணைத்து சீமை கருவேல் மரங்களை அகற்றுவதற்காக உதவி கோரப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் விவசாயத்திற்கும், நிலத்தடி நீருக்கும், சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சீமை கருவேல் மரங்களை அகற்ற தாமாகவே முன்வந்து இது ஒரு இயக்கம் போல் செயல்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோமகன், வழக்கறிஞர் ஆணைக்குழு உறுப்பினர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்