முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புப்பணிகளை செயல்படுத்திட கலெக்டர் சரவணவேல்ராஜ் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு டான்செம் விரிவாக்க வளர்ச்சிப்பணிகளுக்கான ரூ.190 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து மரம் நடுதல், கசிவுநீர் குட்டை மற்றும் மழைநீர் சேகரிப்புப்பணிகளை செயல்படுத்திட மாவட்;ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் நேற்று (18.02.2016) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

 

சிறிய குளம்

 

இவ்வாய்வின்போது மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது:-

அரியலூர் ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்குட்டப்பட்ட சிறிய குளம், குட்டைகள் நீர் பிடிப்புப்பகுதியை அதிகப்படுத்தும் நோக்கில் கரைகளை பலப்படுத்தியும், முற்புதற்களை அகற்ற ஏற்படுகளை செய்வதற்கான மேற்கொண்ட ஆய்வின்போது பட்டுநூல்கார ஏரி கரைகளை பலப்படுத்தியும், நீர் பிடிப்பு பகுதியை ஆழப்படுத்தியும் அதன் வரத்து வாய்கால் சுத்தம் செய்து, எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் உள்ள கபருப்பைய்யா குட்டையை இணைத்து கருப்பைய்யா குட்டையிருந்து உபரிநீர், துரைஏரியையும், வாலாஜாநகர ஊராட்சிக்குட்டப்பட்ட பெரியகுட்டை மற்றும் சந்தான ஏரியை இணைக்கும் விதத்தில் பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மேற்கண்ட பணிகளை செயல்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வெங்டகிருஷ்ணாபுரம் ஏரி, சாவடி ஏரி, ஆலங்குடியார் ஏரி ஆகிய ஏரிகளை நீர் பிடிப்புப்பகுதியை ஆழப்படுத்தியும், கரைகளை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு பயன் பெறும் வகையில் உள்ள குளம், குட்டைகளை கணக்கெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.

இவ்வாய்வின்போது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, நகராட்சி ஆணையர் வினோத், செயற்பொறியர் (வளர்ச்சித்துறை) அருள்மொழி, வட்டாட்சியர் (அரியலூர்) முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கபிலன் மற்றும் வருவாய்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்