முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் தொகுதி–ஐ அரசு தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது - மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தகவல்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறவுள்ள தொகுதி -ஐ பல்வேறு பதவிகளுக்கான எழுத்து தேர்வுக்கு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் தேர்வு பணிகளுக்கு பணியமர்த்தப்படும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கும் விதமாகவும் மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு அவர்களது தலைமையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலர்களின் முன்னிலையில் கூட்டம் நேற்று (18.02.2017); மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

 

ஏற்பாடுகள் தயார்

 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம்; நடைபெறவுள்ள தொகுதி–ஐ ற்கான தேர்வு 06 மையங்களில் நடைபெறவுள்ளது. இதில் 2,720 நபர்கள் தேர்வு எழுது உள்ளனர். இத்தேர்வுக்கு 10 முதன்மை கண்காணிப்பாளர் மற்றும்; 03 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுகு;கு தேர்வு நேரத்தில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளது தொடர்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும்; குரும்பலூர் கல்லூரி, அரசு தொழில் நுட்ப கல்லூரி, பெரம்பலூர் அரசு மேல் நிலை பள்ளி, தொமினிக் மேல் நிலை பள்ளி, ராமகிரு~;ணா மேல் நிலை பள்ளி, மற்றும் தந்தை ரோவர் மேல் நிலைப்பள்ளிகள் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. தேர்வெழுதும் நபர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகளும், தேர்வு நடைபெறும் மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மாரிமுத்து, வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) மகாராஜன், அலுவலக மேலாளர்(பொது) முத்தையன் மற்றும் அலுவலர்கள் பலர்; கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்