முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடரும் இஸ்ரோவின் சாதனை பயணம் : உள்நாட்டு தயாரிப்பான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர்  - இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் ஓர் சாதனையை புரிந்துள்ளது. அதன் படி கிரையோஜெனிக் என்ஜினினை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இஸ்ரோ அறிவிப்பு
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கிரையோஜெனிக் என்ஜினினை வெற்றிகரமாக நேற்று முன்தினம் பரிசோதனை செய்தது. சுமார் 640 விநாடிகள் நடைபெற்ற இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்ஜின் பரிசோதனை
மகேந்திரகிரியில் நடைபெற்ற இந்த சோதனையில் "ஜிஎஸ்எல்வி மார்க் சி-25" ராக்கெட் மூலம் என்ஜின் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் படி கிரையோஜெனிக் என்ஜினின் இறுதிகட்ட சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக ...
முன்னதாக பெங்களூருவின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிலையம் அல்லது ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் நடத்தப்படும் சோதனை முதல் முறையாக மகேந்திகிரியில் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்