முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்தகிரியில் அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      நீலகிரி

கோத்தகிரியில் நடைபெற்ற அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாமில் 119 பேர் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொண்டனர்.

                                  119 பேர் சேர்ப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைப்புசாரா நல வாரியத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலர் நஞ்சன் தலைமை தாங்கினார். இம்முகாமில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் 17 நல வாரியங்களுக்கு 60 வை அமைப்பு சாரா தொழிலாளர்கள் உட்பட 38 வகையான கட்டுமான தொழில்கள் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இம்முகாமில் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 18 வயது முதல் 60 வயதிற்குட்பட்ட மொத்தம் 119 பேர் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொண்டனர்.

                                        திருமண உதவித்தொகை

இவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் திருமண உதவித்தொகை, விபத்து காப்பீடு, கல்வி உதவித்தொகை, குடும்ப ஓய்வூதியம் போன்ற அரசு உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்