முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் வேறு நபரின் முகம் இளைஞர் ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  -  அமெரிக்காவில் வேறு நபரிடம் இருந்து முகம் தானம் பெற்று 56 மணி நேரம் நடந்த உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் அது இளைஞர் ஒருவருக்கு வெற்றிக்கரமாக பொருத்தப்பட்டது.

முகம் சிதைவு
அமெரிக்காவில் மின்னெ கோட்டா மாகாணத்தில் உள்ள வுயோமிங் நகரை சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006-ம் ஆண்டு இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் மரணம் அடையவில்லை. முகம் சிதைந்தது. அதனுடன் மனம் வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் டாக்டரிடம் ஆலோசனை பெற்றார். முகம் தானம் பெற்றார் அப்போது மற்ற உறுப்பு போன்று முகத்தையும் தானம் பெற்று மாற்று ஆபரேசன் மூலம் சீரமைக்கலாம் என தெரிவித்தனர். அதற்காக அவர் காத்திருந்தார். இந்த நிலையில் மின்னெ கோட்டாவைச் சேர்ந்த காலன் ரோஸ் என்பவர் தன்னை தானே துப்பாக் கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி லில்லியின் அனுமதி பெற்று அவரது முகம் தானமாக பெறப்பட்டது.

முக சீரமைப்பு
அதைத் தொடர்ந்து ரோஸ் என்பவரின் முகத்தில் இருந்து மூக்கு, தாடைகள், வாய், உதடுகள், நாடி, மற்றும் பற்கள் ஆபரேசன் மூலம் அகற்றி ஆன்டி சான்ட்னெசுக்கு பொருத்தப்பட்டது. இந்த ஆபரேசன் மின்னெ சாட்டாவில் ரோஸ்செய்டர் நகரில் உள்ள மாபேயி கிளினிக்கில் நடைபெற்றது. இந்த ஆபரேசனை முக சீரமைப்பு சிறப்பு நிபுணர் டாக்டர் சமீர் மார்தானி நடத்தினார்.

56 மணி நேர சிகிச்சை
ஆபரேசன் முடிந்து 3 வாரங்கள் கழித்து கண்ணாடியில் சான்ட்னெஸ் தனது முகத்தை பார்த்தார். அப்போது தனது முகம் முழுவதும் அழகாக மாறி இருப்பதை பார்த்து அதிசயித்தார். முக மாற்று ஆபரேசனை 60 பேர் கொண்ட மருத்துவ குழு நடத்தியது. மொத்தம் 56 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்காக டாக்டர்களுக்கு சான்ட்னெஸ் பாராட்டு தெரிவித்தார். கணவர் ரோசின் முகத்தை தனக்கு தானமாக அளித்த அவரது மனைவி லில்லிக்கு நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago