முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்து வீச்சாளர்களுடைய கேப்டன் விராட் கோலி - உமேஷ் யாதவ்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சாளர்களுடைய கேப்டன் என்று வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

தொடர் வெற்றி...

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையில் டெஸ்ட் அணியில் தோல்வியை சந்திக்காமல் இந்திய அணி வீறுநடை போட்டு வருகிறது. 20 விக்கெட்டுக்களை வீழ்த்தினால்தான் டெஸ்டில் வெற்றி பெற முடியும் என்பதால் பந்து வீச்சுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

கோலிக்கு புகழாரம்

வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவிற்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அவரும் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். விராட் கோலியைப் பற்றி உமேஷ் யாதவ் கூறுகையில்.,

‘‘விராட் கோலி பந்து வீச்சாளர்களின் கேப்டன். அவர் எந்தவொரு பந்து வீச்சாளரையும் பந்து வீச அழைக்கும்போது, உங்களுடைய யோசனையின்படி பீல்டிங் அமையுங்கள் என்று சொல்வார்.

மாற்றுத் திட்டம்

என்னிடம் பந்தை கொடுக்கும்போது, என்னுடைய திட்டம் என்ன? அல்லது முக்கியமான இடத்தில் பீல்டரை நான் நிறுத்த வேண்டுமா? என்று கேட்பார். உங்களுடைய நோக்கத்திற்கும், திட்டத்திற்கும் பின்னால் அவர் நிற்பார். உங்களுடைய திட்டம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மட்டுமே, உங்களிடம் வந்து, மாற்று திட்டத்தைக் கூறுவார். நான் திட்டம் ஏ-ஐ செயல்படுத்த அனுமதி பெறுவேன். அது சரியாக வேலை செய்யவில்லை எனில் திட்டம் பி-ற்கு செல்வேன்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago