முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வினை 2 ஆயிரத்து 492 பேர் எழுதினர்.

      தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தொகுதி-ஐ தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களான ராமநாதபுரம் யுனைடெட் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்குலேசன் பள்ளியில் உள்ள தேர்வுமையங்களை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர்அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1 துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற பதவிகளுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. இத்தேர்வில் கலந்துகொள்வதற்காக மாவட்டத்தில் மொத்தம் 3ஆயிரத்து 838 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இன்று நடைபெறும் தேர்வில் 2ஆயிரத்து 492 நபர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வில் 65 சதவிகிதம்; தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வானது மாவட்டத்தில் மொத்தம் 14 இடங்களில் நடைபெற்றது. இத்தேர்வினை கண்காணித்திட மாவட்டத்தில் 3 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

     தேர்வுபணிகளில் வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு தேர்வு அறையிலும் வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் அடங்கிய முத்திரையிடப்பட்ட உறைகளைப் பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வறையில் தேர்வு எழுதுபவர்களுக்கு அடிப்படைவசதிகளான குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரவசதி, பேருந்துவசதி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தேர்வானது காலை 10 மணிமுதல் துவங்கி  அமைதியான முறையில் நடைபெற்றுவருகிறது. இவ்வாறு கூறினார். இந்த ஆய்வின் போது பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago