முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப்-1 டி.என்.பி.எஸ்.சி தேர்வு : 85 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டுதேர்வு எழுதினர்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயம் சார்பில் குரூப் 1 தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 85 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை 2 லட்சத்து 17 ஆயிரத்து 773 பேர் எழுதினர்.

சென்னை:

சென்னையில் குரூப் 1 தேர்விற்காக அமைக்கப்பட்டிருந்த 146 மையங்களில் 43 ஆயிரத்து 836 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதுவோர் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் :

திருச்சி மாவட்டத்தில் 21 மையங்களில் 9 ஆயிரத்து 479 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்களை கொண்டு தேர்வு எழுதினர்.

வேலூர் மாவட்டத்தில் 25 தேர்வு மையங்களில் 7 ஆயிரத்து 313 பேர் குரூப் 1 தேர்வை எழுதினர். தேர்வு நடைபெற்ற மையங்களில் மாவட்ட ஆட்சியர் திரு. ராமன் நேரில் சென்று பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டம் :

ஈரோடு மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட 15 மையங்களில் 6 ஆயிரத்து 577 பேர் தேர்வு எழுதினர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் திரு. பிரபாகர் தேர்வு மையங்களை பார்வையிட்டார்.

தஞ்சாவூர்- நாகை மாவட்டம் :

தஞ்சாவூர் மாவட்டத்தில் 19 தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 399 பேர் குரூப் 1 தேர்வை எழுதினர். தேர்வு மையங்களை கண்காணிக்க 4 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 4 ஆயிரத்து 224 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் திரு. சஜ்ஜன் சிங் சவான் நேரில் சென்று பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 15 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில், 4 ஆயிரத்து 226 பேர் பங்கேற்றனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 57 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க 14 கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் 2 பறக்கும் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேபோன்று திருப்பூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago