முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் மாசிமகாசிவராத்திரி திருவிழா: சுவாமி,அம்மன் வெள்ளி வாகனங்களில் வீதியுலா.

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்-   ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சுவாமி,அம்மன் வெள்ளி வாகனங்களில் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு  எழுந்தருளி பக்தர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அருள் பாலித்தன.

  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மகாசிவராத்திரி பிப்ரவரி 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  12 நாட்கள் நடைபெறும்  இத்திருவிழாவில் சுவாமி,அம்மன் தினசரி ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழச்சி நடைபெறும். இதைனையொட்டி திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று காலையில் திருக்கோயிலில் ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்றது.பின்னர் திருக்கோயிலிருந்து காலை 8 மணிக்கு   அலங்காரத்துடன்  ராமநாதசுவாமி,பிரியாவிடை வெள்ளி பூத வாகனத்திலும்,பர்வதவர்த்தின் அம்மன் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி  நான்கு வீதிகளில் உலா வந்து பின்னர் நடுத்தெரு,திட்டக்குடித்தெரு வழியாக கெந்தமாதன பர்வதம்  மண்டகப்படிக்கு காலை 11 மணிக்கு சென்றடைந்தன.அங்கு சுவாமி,அம்மனுக்கு  சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்றது.பின்னர் அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்த சுவாமி,அம்மன் புறப்பாடகி மாலையில் திருக்கோயிலை வந்தடைந்தது.சுவாமி,அம்மன் வீதியுலாவில் திருக்கோயில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன்,கண்காணிப்பாளர் ககாரின்ராஜ்,இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன்,பேஷ்கார்கள் அண்ணாதுரை,கலைச்செல்வம்,செல்லம் மற்றும் அலுவலர்கள் முத்துக்குமார்,நாகபாண்டி,சிவமணி.கண்ணன் உள்பட  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்